Friday, December 20, 2013

யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள் 2013 A/L


இந்த வருடம் நடைபெற்ற கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர். இதில் 13 மாணவர்கள் கணிதத் துறையிலும், 2 மாணவர்கள் உயிரியல் துறையிலும், 3 மாணவர்கள் வர்த்தகத்துறையிலும் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.

கணிதத்துறையில் இராஜசேகரன் யதுசன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 3ஆவது இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.

உயிரியல் துறையில் இரட்ணசிங்கம் பிரணவன் மாவட்ட மட்டத்தில் 2 ஆவது இடத்தினையும், தேசிய மட்டத்தில் 8 ஆவது இடத்தினையும் பெற்றுக் கொண்டார். இவர் ஆங்கில மொழி மூலமாக தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக துறையில் கிருபாலன் சுபாங்கன் மாவட்ட மட்டத்தில் 7 ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டார்.

அதே போன்று கலைத்துறையில் 2A,B சித்தியினை சிறீஸ்கந்தராஜா சிவஸ்கந்தசிறி பெற்றுகொண்டுள்ளார்.

3A சித்தி பெற்ற மாணவர்களது விபரம் :

கணித துறை :

1) இராஜசேகரன் யதுசன் ( மாவட்ட நிலை - 01 , தேசிய நிலை - 03)
2) சண்முகலிங்கம் குருபரன் ( மாவட்ட நிலை - 04 , தேசிய நிலை - 22)
3) சிவகுமார் மேகலாதன் ( மாவட்ட நிலை - 05 , தேசிய நிலை - 25)
4) நகுலநாதன் லவலோஜன் ( மாவட்ட நிலை - 08 , தேசிய நிலை - 40)
5) சந்திரநேசன் ராம்ராஜ் (மாவட்ட நிலை - 09)
6) கைலாசபதி சுதாகர் (மாவட்ட நிலை - 11)
7) குணாநந்தசீலன் நிலக்சன் (மாவட்ட நிலை - 13)
திருலிங்கம் ஆதவலோசன் (மாவட்ட நிலை - 16)
9) செந்தில்நாதன் கிருசாந் (மாவட்ட நிலை - 34)
10)குமாரசாமி கஜானன் (மாவட்ட நிலை - 40)
11)புண்ணியராஜா திவாகரன் (மாவட்ட நிலை - 41)
12)நந்தகுமாரன் கேதீஸ்வரன் (மாவட்ட நிலை - 43)
13)சண்முகநாதன் சந்தோஸன் (மாவட்ட நிலை - 52)

உயிரியல் துறை :

14) இரட்ணசிங்கம் பிரணவன் ( மாவட்ட நிலை - 02 , தேசிய நிலை - 08)
15) துரைசிங்கம் ஆதவன் (மாவட்ட நிலை - 05)

வர்த்தக துறை :

16) கிருபாலன் சுபாங்கன் (மாவட்ட நிலை - 05)
17) இதயராஜா ரமணன்
18) கோபலச்சந்திரன் குகரூபன்



Saturday, March 12, 2011

இந்துகளின் சமர் (BATTLE OF THE HINDUS) - 2011


யாழ்ப்பாணத்தின் பெரும் புகழ் பூர்த்த இரு இந்து கல்லூரிகளான யாழ்ப்பாணம் இந்துகல்லுரி மற்றும் கொக்குவில் இந்து கல்லுரி களுக்கிடையான நான்காவது வருடாந்த இந்துகளின் கிரிக்கெட் சமர் இம்முறை எதிவரும் 18ம் மற்றும் 19ம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லுரி மைதானத்தில் வெகு விமர்சையாக ஆரம்பமாக உள்ளது.

2010 ம் ஆண்டிலே கொக்குவில் இந்து கல்லூரி தனது 100 வது ஆண்டில் காலடி எடுதுவைதிருப்பதுடன் யாழ்ப்பாணம் இந்து கல்லுரிஜின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் தனது 100 வது ஆண்டில் தடம் பதித்துள்ள இந்தருநமானது இரு கல்லூரிகளையும் பொருத்தமட்டில் வரலாற்று சுவடுகளில் எழுதப்பட வேண்டிய ஆண்டாகும் எனவே இந்த 2011ம் ஆண்டிற்கான 4வது வருடாந்த இந்துகளின் கிரிக்கெட் சமர் யாழ் கிரிக்கெட் சமர்களின் வரலாற்றில் புதியதொரு அத்தியாத்தை எழுதும் என்பதில் ஐயமில்லை.

இந்துகள் சமரானது 2008 ம் ஆண்டு முதல் முறையாக இரு கல்லூரிகளுக்கும் இடையே கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியானது வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது. இதில் இரு கல்லூரி வீரர்களும் தமது திறமைஜை முழுமையாக வெளிபடுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2009ம் ஆண்டு தவிக்க முடியாத காரணங்கலால் ஆடம்பரங்கள் எதுவும் இன்றி மிக எளிமையான முறைஜில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றிருந்தது. இப்போட்டியும் வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது.

இதே நேரம் 2010ம் ஆண்டிற்கான இந்துகள் சமர் கொக்குவில் இந்து கலூரிஜின் விஸ்தரிக்கப்பட்ட மைதானத்தின் புதிய ஆடுகளத்தில் இப்போட்டி இடம்பெற இருந்தது. இந்த போட்டியும் வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது.

இதேவேளை இரு கல்லூரிகளுக்கும் இடையிலான மடுப்படுத்தப்பட்ட பந்து பரிமாற்றங்களை கொண்ட சபாலிங்கம் வெற்றி கிண்ணத்திற்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ம் திகதி நான்காவது முறையாக கொக்குவில் இந்து கல்லூரி நாகலிங்கம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த மூன்று போட்டிகளிலே முதல் இரண்டு போட்டிகளில் யாழ் இந்து கல்லூரியும் மூன்றாவது போட்டியில் கொக்குவில் இந்து கல்லூரியும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடதக்க அம்சமாகும்.

இதே வேளை கொக்குவில் இந்து கல்லூரி அணிஜினர் இவ்வருடம் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலை அணிகளுகிடைஜிலான கிரிக்கெட் தொடரின் 3வது பிரிவில் கால் இறுதிவரை முன்னேறி இருந்தனர் அதேவேளை யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணிஜினரும் இந்தொடரில் பல வெற்றிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் இப்போட்டியின் போதான ஸ்கோர் விபரங்களை www.kokuvilhindu.net எனும் இணைய தளம் ஊடாக அறிந்து கொள்ள முடியும். எனவே இந்த 2011ம் ஆண்டிட்கான இந்துகள் சமர் யாழ் குடாநட்டில் பலத்த எதிபர்பை உருவாக்கும் என்பது கிரிக்கெட் அவலர்கது எதிர் பார்ப்பாகும்.

இணைப்பு: கடந்த மூன்று இந்துகள் சமரின் ஸ்கோர் அட்டவணை.
2008
1st innings
K.H.C 200 all out
J.H.C 148 all out
2nd innings
K.H.C 123/3 declare
J.H.C 43/2

2009
1st innings
K.H.C 290 all out
J.H.C 170 all out
2nd innings
K.H.C 84/1

2010
1st innings
J.H.C 159 all out
K.H.C 164 all out
2nd innings
J.H.C 104/9

Sunday, March 6, 2011

Monday, January 3, 2011

"மீண்டும் இணைவோம்" ஓன்றுகூடல்



1.1.2011அன்று காலை நடைபெற்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 2007A/L பழையமாணவர்களின்
"மீண்டும் இணைவோம்"ஓன்றுகூடல்
மற்றும் சுற்றுலா நிகழ்வில் பலத்த கருத்து பரிமாறல்கள் மற்றும் எதிர்ப்பு ஆதரவுகளின் மத்தியில் 10 பேர் ஒருங்கிணைப்பாளர்களாக தெரியப்படனர்
1)அர்ஜுன்
2)சயந்தன்
3)யோகதீசன்
4)பாரதன்
5)கஜீபன்
6)பிரதீபன்
7)நிராகுலன்
8)சுகாணன்
9)பார்த்தீபன்
10)கிஷோக்குமார்
இவர்கள் நண்பர்களை ஒன்றிணைத்தல், ஓன்றுகூடல் மற்றும் சுற்றுலா
நடாத்துதல் போன்றவற்றுக்கு பொறுப்பாக இருப்பார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டது

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 2007A/L பழையமாணவர்களின்
"மீண்டும் இணைவோம்"ஓன்றுகூடல் மற்றும்
சுற்றுலா புகைப்படங்கள்





Thursday, December 30, 2010

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 2007A/L பழையமாணவர்களின் "மீண்டும் இணைவோம்




யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 2007A/L பழையமாணவர்களின்
"மீண்டும் இணைவோம்"ஓன்றுகூடல்
மற்றும்
சுற்றுலா மற்றும் கிரிக்கெட் போட்டி நடாத்த உள்ளோம்
மற்றும் வெற்றி பொறும் அணிகளுக்கு பணப்பரிசில் 2500/=

காலம்:- 1.1.2011 காலை 9.00
இடம் :-கல்லூரி மைதானம்
யாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் அனைவரும் மைதானத்தில் ஓன்று கூடவும்
தொடர்புகளுக்கு
077 8191307
077 3626882
077 8097804

உதயன் விளம்பரம்


Tuesday, December 28, 2010

JAFFNA HINDU OLD BOYS 2007

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 2007A/L பழையமாணவர்களின்
"மீண்டும் இணைவோம்"ஓன்றுகூடல்
காலம்:- 1.1.2011 காலை 9.00
இடம் :-கல்லூரி மைதானம்
யாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் அனைவரும் மைதானத்தில் ஓன்று கூடவும்
தொடர்புகளுக்கு
077 8191307
077 3626882
077 8097804

Dear friends
We are Kindly invite you to This Blog
next 1.1.2011 our2007 A/L Batch will meet together
"MEENDUM INAIVOM"
in school Ground at 9.am
so all of our school friends come there
We will meet again & have a wonderful day
we are waiting for you.....
Contact:-
077 8191307
077 3626882
077 8097804

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes