யாழ்ப்பாணத்தின் பெரும் புகழ் பூர்த்த இரு இந்து கல்லூரிகளான யாழ்ப்பாணம் இந்துகல்லுரி மற்றும் கொக்குவில் இந்து கல்லுரி களுக்கிடையான நான்காவது வருடாந்த இந்துகளின் கிரிக்கெட் சமர் இம்முறை எதிவரும் 18ம் மற்றும் 19ம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லுரி மைதானத்தில் வெகு விமர்சையாக ஆரம்பமாக உள்ளது.
2010 ம் ஆண்டிலே கொக்குவில் இந்து கல்லூரி தனது 100 வது ஆண்டில் காலடி எடுதுவைதிருப்பதுடன் யாழ்ப்பாணம் இந்து கல்லுரிஜின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் தனது 100 வது ஆண்டில் தடம் பதித்துள்ள இந்தருநமானது இரு கல்லூரிகளையும் பொருத்தமட்டில் வரலாற்று சுவடுகளில் எழுதப்பட வேண்டிய ஆண்டாகும் எனவே இந்த 2011ம் ஆண்டிற்கான 4வது வருடாந்த இந்துகளின் கிரிக்கெட் சமர் யாழ் கிரிக்கெட் சமர்களின் வரலாற்றில் புதியதொரு அத்தியாத்தை எழுதும் என்பதில் ஐயமில்லை.
இந்துகள் சமரானது 2008...